Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 07 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாடியிலிருந்து கடந்த 4ஆம் திகதி குதித்த, ஒரு பிள்ளையின் தந்தையொருவர்; மரணமடைந்ததையடுத்து எம்பிலிப்பிட்டிய நகரில், கறுப்பு கொடிகள் கட்டவிடப்பட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொலிஸாருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வீதிகளை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் இவ்வார்ப்பாட்ட காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து, எம்பிலிப்பிட்டிய நகரில் உள்ள கடைகள் யாவும் மூடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எம்பிலிப்பிட்டிய நகரில் உள்ள மாடிக்கட்டிமொன்றின் மூன்றாவது மாடியில் விருந்துபச்சார வைபவமொன்று கடந்த 4ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வைபவத்தில் இருதரப்பினக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை தடுப்பதற்கு பொலிஸார், ஸ்தலத்துக்கு விரைந்துள்ளனர்.
இதனையடுது;து பொலிஸாருக்கும் விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்தவர்களில் ஒரு குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மோதலின் போது, மூன்றாவது மாடியிலிருந்து ஒருவர் கீழே குதித்துள்ளார்.இதேவேளை, இச்சம்பவத்தில் பொலிஸார் நால்வரும், மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்தவர் உள்ளிட்ட பொதுமக்கள் மூவரும் காயமடைந்துள்ளனர்.
அனைவரும், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், மாடியிலிருந்து குதித்தவர், இன்று வியாழக்கிழமை காலை மரணமடைந்துவிட்டார்.
அவரது மரணத்துக்கு பொலிஸாரே பொறுப்பு கூறவேண்டும் என்று கூறியே ஆர்;ப்பாட்டக்காரர்கள், பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த பொலிஸாரில் இருவர், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .