Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்தாண்டில் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் டிக்கோயா - கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையைத் திறந்துவைப்பதற்காகவே, இந்தியப் பிரதமர், இலங்கை வரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வருடம் மே மாதம் நடைபெறவுள்ள வெசாக் பௌர்ணமி தினத்தன்று, மேற்படி வைத்தியசாலை திறந்து வைக்கப்படுமென்றும் இதனையடுத்து, கொழும்பு - காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள யோகா பயிற்சி வேலைத்திட்டத்திலும் அவர் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய வலயத்தின் 69ஆவது மாநாடு, கடந்த சில தினங்களாக, இலங்கையில் நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்த இந்திய சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, பிரதமர் மோடியின் இலங்கையின் விஜயம் தொடர்பில், இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
6 hours ago
7 hours ago