Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 21 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாடறுப்பு விவகாரம், அரசாங்கத்தின் கருத்தல்ல என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தாகும். அவை தொடர்பில் ஆராயலாமே தவிர, அதுவொரு பிரச்சினையல்ல என்றும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நிறைவடைந்ததன் பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் அலவளாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மாடறுப்பு விவகாரம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பேசுவதாக முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். அவ்வாறு எதுவுமே நடைபெறவில்லை. மாடறுப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்துதெரிவித்துள்ளார். அதனை விவாதத்துக்கு உட்படுத்துவது உசித்தமானதாகும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .