2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மீண்டும் வருவேன் என்று புறப்பட்டார் ஹுஸைன்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், மீண்டும் இலங்கைக்கு வருவேன் என்று கூறிவிட்டு, இன்று (10) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறினார்.

இன்று அதிகாலை 3 மணியளவில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கிப் புறப்பட்டார் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், “வெகு விரைவில் மீண்டும் இலங்கைக்கு வருவேன்” என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X