Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 27 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தவறு செய்ததாகக் கூறப்படும், நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியின் தலையில், அவ்வகுப்பில் பயிலும் ஏனைய 44 மாணவிகளைக் கொண்டு தலையிலேயே குட்டவிட்ட ஆசிரியை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அந்த வித்தியாலயத்துக்குப் பயிற்சிக்காக வருகைதந்திருந்த விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த ஆசிரியையே, இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை, காலி மேலதிக நீதவான் கேசர சமரதிவாகர முன்னிலையில், நேற்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் தந்தையை அழைத்த மேலதிக நீதவான், இந்தச் சம்பவத்தினால், அப்பிள்ளைக்கு ஏதாவது வருத்தம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து, சிறுவர் மற்றும் பெண்கள் அதிகாரசபையின் கவனத்துக்குக் கொண்டுவருமாறும் கட்டளையிட்டார்.
இச்சம்பவம், காலி அனுதேவி மகளிர் வித்தியாலயத்திலேயே கடந்த 23ஆம் திகதியன்று இடம்பெற்றது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டுக் குழுவின் அதிகாரியான
கே. நாணயக்கார தெரிவித்தார்.
இவ்வாறான மோசமான தண்டனையை வழங்குவதன் ஊடாக, பிள்ளைகள், மன அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவற்றைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago