Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பை மேட்டில், 235 இலட்சம் தொன் குப்பை உள்ளது என்று, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இந்தக் குப்பை மேடானது, 300 அடிக்கு மேல் உயரமானது என்றும் நாளொன்றுக்கு 800 தொன் குப்பை சேகரிக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'இந்தப் பாரிய நிலைமைகளை கவனத்தில் கொண்டு, இரண்டு கட்சிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். குப்பைப் பிரச்சினை காரணமாக அப்பிரதேசத்தில் 150 கிணறுகள் மூடப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமாயின், குப்பைகளைச் சேகரிப்பதை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தி வைக்கவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .