2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பாவனைச் சட்டம் கடுமையாக்கப்படும்

Gavitha   / 2016 ஜனவரி 23 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 மைக்ரோனுக்கும் குறைவான அளவுடைய பொலித்தீனை பாவிப்போருக்கு எதிராக, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வகையான பொலித்தீனை உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

20 மைக்ரோனுக்கும் குறைவான அளவுடைய பொலித்தீனுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகார சபை கூறியுள்ளது.

பொலித்தீன் பாவனையாளர்களுக்கு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர், இந்தச் சட்டத்தை அதிகாரிகள் கடுமையாக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குற்றவாளிகளாக இனங்காணப்படுபவர்களுக்கு 10,000 ரூபாய்க்கும் குறைந்த அபராதம் அல்லது இரண்டு வருடத்துக்கும் குறைந்த சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X