Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டுமுதல், முதலாம் தரத்தில் வகுப்பொன்றுக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆக இருக்கவேண்டுமென, கல்வியமைச்சின் செயலாளர், பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். விஷேட சுற்றிக்கையின் மூலமே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் தரத்தில் வகுப்பொன்றுக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை, 35ஆக இருக்கவேண்டுமென கல்வியமைச்சின் செயலாளருக்கு, உயர்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு மட்டும் 40 என்ற எண்ணிக்கை இருக்கவேண்டுமென்றும் அதற்குப்பின்னர், ஒவ்வொரு வருடத்துக்கும் ஒவ்வொரு மாணவர் என்ற வீதம் குறைத்து, 2021ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆகக் குறைக்க வேண்டும் எனவும் அச்சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றிக்கையால் அதிபர்கள் அசௌகரியம்
2016ஆம் ஆண்டுமுதல், முதலாம் தரத்தில் வகுப்பொன்றுக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 35லிருந்து 40 ஆக அதிகரிக்க வேண்டுமென கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதால் பாடசாலை அதிபர்கள் பெரும் சிரமத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
முதலாம் தரத்துக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 35 எனக் கணித்த பாடசாலை அதிபர்கள், மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களின் பெயர் விவரங்களை பாடசாலை அறிவித்தல் பலகைகளில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
முதலாம் தரத்துக்கு நேர்முகத் தேர்வு மூலம் 28 மாணவர்களையும் மேன்முறையீடு மூலம் 2 மாணவர்களையும் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றுபவர்கள் சார்பில் 5 மாணவர்கள் என்ற ரீதியிலும் 35 பேரைத் தெரிவு செய்கின்றனர்.
இதேவேளை, முதலாம் தரத்துக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களை, பாடசாலைகளுக்கு உள்ளீர்த்துக்கொள்ளும் வைபவத்தை ஜனவரியில் நடத்துமாறு கல்வியமைச்சு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
56 minute ago
1 hours ago