2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

முதலாம் வகுப்புக்கு ஒருவர் குறைப்பு

Kanagaraj   / 2016 மே 31 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பாடசாலைகளில் 2017ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பங்களை, கல்வியமைச்சு நேற்றுத் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், முதலாம் தர வகுப்பொன்றுக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை, 40இலிருந்து 39ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

முதலாம் தர வகுப்பொன்றுக்காக 34 பிள்ளைகள் பாடசாலையின் மூலமும்;, 05 பிள்ளைகள் யுத்த நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்ட முப்படைகள், பொலிஸ் உறுப்பினர்களின் பிள்ளைகளிலிருந்தும் தெரிவு செய்யப்படுவர். இதன்படி, வகுப்பொன்றில் இருக்க வேண்டிய உச்ச மாணவர்களின் எண்ணிக்கை 39 ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .