2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மின்சாரம், நீர், மருந்துக்கு வட் இல்லை: ஹலோவுக்கு வரி

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள வட் வரி அதிகரிப்பினால், நீர், மின்சாரக் கட்டணங்களும் மருந்துகளின் விலைகளும் அதிகரிக்கப்பட மாட்டாது. அதனால், பொதுமக்கள் அது தொடர்பில் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவைத் திர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு, கொழும்பு தகவல்திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், 'ஆடம்பரப் பொருட்கள் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X