2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மின்னுயர்த்தியில் சிக்கிய யுவதி மீட்பு

Kanagaraj   / 2016 ஏப்ரல் 19 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரம் தடைப்பட்டதனால் மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதியொருவர் 45 நிமிடங்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கொழும்பு-02, கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளது.

கொம்பனி வீதியில் உள்ள வீடமைப்பு தொகுதியில் வசிக்கும் அந்த யுவதி, மின்னுயர்த்தியின் மூலமாக ஏழாவது மாடியிலிருந்து, கீழே வந்துகொண்டிருந்தபோதே, இடைநடுவில் இறுகிக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், தீயணைப்பு சேவை திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர், அந்த யுவதியை மீட்டுள்ளனர்.

மின்னுயர்த்தி அறுத்து துண்டாக்கப்பட்டதன் பின்னரே, அந்த யுவதி மீட்கப்பட்டார்.

தான், மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்டதாக அந்த யுவதி, தன்னுடைய அலைபேசியின் ஊடாக தன்னுடைய தாய்க்கு தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தெரிவித்திருக்காவிடின், அந்த யுவதியை காப்பாற்றியிருக்க முடியாது என்றும் தீயணைப்பு படையினர் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X