Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 21 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்த காலத்தில், அவ்வமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றிய தமயந்தி ஜயரத்ன, எவ்விதமான முன்னறிவித்தல்களும் இன்றி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக அறியமுடிகின்றது. அவர், தற்போதைய ஆட்சியில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றினார்.
அவன்காட் நிறுவனத்துக்கு ஆயுதம் வழங்குவதற்கு முந்திய அரசாங்கத்தின் காலத்தில் முன்னின்று செயற்பட்டதாக கூறப்படும் அவரை, கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார். ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில், பாரிய மோசடி,ஊழல் அரசசொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் சாட்சியமளித்திருந்தார் என்பதுடன் அவருக்கு இரட்டை பிரஜாவுரிமை உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .