Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கெலும் பண்டார
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சித் தேர்தல்களை நடாத்தும் போது தேர்தல் விடுதிகளைப் பிரிக்கும் போதும் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் குறித்துக் கவனம் செலுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னைய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில், தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையினதும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையினதும் கலப்பு முறையில் இத்தேர்தல் நடாத்தப்படவுள்ளன.
உறுப்பினர்களில் மூன்றிலிரு பங்கினர் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையின் அடிப்படையிலும், மிகுதிப் பேர் பிரதிநிதித்துவ முறையின் அடிப்படையிலும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
எல்லைகளை வகுப்பதில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமைகளைத் தீர்க்குமாறு கட்சிக்கு பல்வேறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக, ஸ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையின் கீழ் கட்சியைச் சீரமைப்பதற்கு புதிய செயற்குழுவொன்றை ஸ்ரீ.ல.சு.க.யின் மத்திய செயற்குழு நியமித்துள்ளதாகவும் துமிந்த திஸாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
35 minute ago
46 minute ago
3 hours ago