2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மகளின் திருமணத்தில் நடனமாடியவர் மயங்கி விழுந்து மரணம்

Janu   / 2025 ஜூலை 06 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த நிஸ்ஸங்க கிங்ஸ்லி லால் டி சில்வா (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வாதுவ பகுதியில் நடைபெற்ற தனது மகளின் திருமண விழாவின் இறுதியில் நடனமாடிக்கொண்டிருந்துள்ளதுடன் இதன் போது திடீரென மயங்கி விழுந்த அவரை பாணந்துறை அடிப்படை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .