2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மக்களுக்கு விநியோகிக்க உணவு தயாரித்தவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

ஊரடங்கு உத்தரவை மீறி, எவ்வித முன் அனுதியும் இன்றி, சுகாதார ஆலோசனைகளைக் கருத்திற்கொள்ளாது, மக்களுக்கு விநியோகிப்பதற்காக உணவு தயாரித்த ஒருவர், நேற்று(25) மாலை பேருவளை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அத்துடன், குறித்த நபர் உணவு தயாரிப்பதற்காகப் பயன்படுத்திய பெருமளவு பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

பேருவளை பகுதி அதிக அவதானமிக்க வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை ஒன்றுதிரட்டி உணவு விநியோகிப்பதானது, சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்குமென, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த, பேருவளை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X