2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மக்களை எச்சரிக்கும் சுகாதார அமைச்சு

Freelancer   / 2022 ஜனவரி 09 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்களால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் மரண எண்ணிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

நாளாந்தம் சுமார் 35,000 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதுடன், 35 பேர் விபத்துக்களால் மரணமடைகின்றனர் என்று சுகாதார அமைச்சின் ஆலோசகரும் சமூக வைத்தியர், தொற்றாத நோய் பிரிவின் டொக்டர் சமிதா சிறிதுங்க தெரிவித்தார்.

ஆண்டுதோறும், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் ஆறு முதல் ஏழு மில்லியன் பேர் அனுமதிக்கப்படுவதாகவும் இதில் 1.3 மில்லியன் பேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டில் மொத்தமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதாவது ஐந்தில் ஒருவர் விபத்துக்களால் காயமடைய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .