Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2020 மார்ச் 22 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது மக்கள் நடமாடும் இடங்களில் கிருமி தொற்றகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புறக்கோட்டை மத்திய பஸ் திரிப்பிடம், கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள், குணசிங்கபுர தனியார் பஸ் தரிப்பிடம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கங்காராம விகாரை ஆகிய இடங்களில் இன்று (22) முற்பகல் கிருமி தொற்றகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஜனாதிபதி அலுவலக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி எகொடவெலே மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.விக்ரமரத்ன ஆகியோரின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்நிகழ்ச்சித்திட்டத்தை நெறிப்படுத்தினார்.
வேகமாக தண்ணீரைப் பீய்ச்சும் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டதன் பின்னர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டமும் கொரோனா தொற்று நிலைமை நீங்கும் வரை நடைமுறைப்படுத்தப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago