2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மஞ்சளுக்கான வேட்டை தொடரும்: வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கமானது மஞ்சள் தூளுக்கான நிர்ணய விலையை அறிவித்துள்ள நிலையில், அதிக விலைக்கு மஞ்சள் தூளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, நுகர்வோர் விவகாரங்கள், தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் மஞ்சள் தூள் 750 ரூபாய்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது.

எனவே, நிர்ணய விலையையும் மீறி மஞ்சள் தூளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், விசேட தேடுதல் நடவடிக்கைளில், நுகர்வோர் திணைக்கள அதிகரிகள் ஈடுபவுள்ளனர் என்று, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அசேல பண்டார மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X