Lenin Raj / 2026 மே 04 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சரவணன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியநாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரலாங்குளம் பகுதியில், காட்டு யானை தாக்கியதில் 76 வயதுடைய முதியவர் ஒருவர் இன்று 04.காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள நவுண்டனியமாடு பகுதியில் அமைந்துள்ள நெல் வயல்களில், பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்று காலை சுமார் 08:00 மணியளவில் இத்தாக்குதல் குறித்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் மாவடிவேம்பு 02, நௌக்கராசு தெருவைச் சேர்ந்த 76 வயதுடைய ஆறுமுகம் கண்டுமணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் வேறு யாரும் இல்லாத காரணத்தினால், விபத்து நிகழ்ந்த துல்லியமான நேரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், உயிரிழந்தவரின் மருமகனான பாலமணி அன்பரசா, இச்சம்பவம் இன்று அதிகாலையிலேயே நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தற்போது உயிரிழந்தவரின் உடல் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியநாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யானை - மனித மோதல் அதிகரித்து வரும் நிலையில், முதியவர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago