2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

மடியில் குதித்த சிறுமியால், காரில் மோதி ஒருவர் பலி

Janu   / 2025 ஜூன் 15 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரை செலுத்தி வந்த பெண்ணின் மடியில் அவரது  இரண்டு வயது மகள் குதித்ததில், கார் கட்டுப்பாட்டை இழந்து, பாதசாரி ஒருவர், முச்சக்கர வண்டி மற்றும் சிறிய லொறி மீது  மோதியுள்ளதுடன் இதில் பாதசாரி உயிரிழந்து, மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

 காரை செலுத்தி வந்த பெண் தனது மகளுடன் தேவாலயத்திற்குச் சென்று , பின்னர் அவரை பின் இருக்கையில் அமரவைத்து  களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்துள்ளார். வாதுவ, தல்பிட்டி பகுதியில் வைத்து சிறுமி பின் இருக்கையில் இருந்து ஓட்டுநர் இருக்கைக்கு குதித்ததாகவும், இதன்போது கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை  விட்டு விலகி, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீதும், நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் லொறி மீதும் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.   

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலைக்கு உடனடியாக  கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .