2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.சரவணன்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள, முந்தன் குமாரவேளி ஆற்றில், மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், இன்று (18) காலை இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக  விசாரணைகளைக்  கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .