2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மண்சரிவிலிருந்து பாதுகாப்பு பெறக்கூடிய வீட்டுத்திட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதூரமான மண்சரிவு அபாயங்களை எதிர்கொள்ள கூடிய பகுதிகளில், மண்சரிவால் பாதிப்பு ஏற்படாத வகையிலான 10 ஆயிரம் வீடுகளை அமைக்க, நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் முதல் அம்சமாக, 2,530 மில்லியன் செலவில் 1,170 வீடுகள் அமைக்கப்படவுள்ளனவென, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி, களுத்துரை ஆகிய மாவட்டங்களில் இத்திட்ம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன பொறியியல் நிறுவனம், அந்நாட்டு தனியார் நிறுவனமொன்றுடன் இணைந்து, இத்திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென்றும் அவர் ​கூறினார்.

மேற்படி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைசாத்திடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ள அவர், அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதெனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X