R.Tharaniya / 2025 நவம்பர் 19 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
முத்தம் கொடுக்க முயன்ற கள்ளக்காதலனின் உதட்டை கடித்து துப்பிய கள்ளக்காதலி தொடர்பில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாம்பி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அதேவேளை, சாம்பிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலை வளர்த்துள்ளனர்.
இதனிடையே, அந்த இளம்பெண்ணுக்கு வீட்டில் பெற்றோர் வெறொரு நபருடன் திருமணம் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால் கள்ளக்காதலை முறித்துக்கொள்ளும்படி சாம்பியிடம் அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
ஆனால், அதை ஏற்கமறுத்த சாம்பி தன்னுடன் தொடர்ந்து கள்ளக்காதலில் இருக்கும்படி அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இளம்பெண் செவ்வாய்க்கிழமை (18) அன்று மதியம் கிராமத்தில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த கள்ளக்காதலன் சாம்பி இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் முத்தம் கொடுக்க வந்த தனது கள்ளாதலன் சாம்பியின் உதட்டை கடித்து துப்பியுள்ளார்.
இதில், சாம்பியின் உதடில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த சாம்பி வலியில் அலறி துடித்துள்ளார். சாம்பியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

21 minute ago
26 minute ago
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
38 minute ago
41 minute ago