2024 மே 06, திங்கட்கிழமை

மைத்திரிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

Editorial   / 2024 ஏப்ரல் 24 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதானகே புதன்கிழமை (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் கலாசார அமைப்பாளருமான  முண்டிகு சரச்சந்திரன் மற்றும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்ததன் பின்னர் இந்த இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்து.

 வழக்கு விசாரணை நிறைவுக்கு வரும் வரையிலும் இந்த இடைக்காலத்தடையுத்தரவு அமுலில் இருக்கும்

2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை சர்ச்சந்திர தாக்கல் செய்துள்ளார், மேலும் மைத்திரிபால சிறிசேன 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாந்த ஜயவர்தன நீதிமன்றில் தெரிவித்தார்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க சாத்தியமில்லை எனவும் அவர்கள் ஆதரவாளர்களாக செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாத, பிரதிவாதங்களை அவதானித்த நீதவான், இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததுடன், ஆட்சேபனைகளை ஜூன் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் சட்டத்தரணி ஜயமுதித ஜயசூரிய மற்றும் சட்டத்தரணி சம்பத் பெரேரா ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X