2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதுஷுக்கு உதவிய சிவாவைத் தேடும் பொலிஸ் விசேட படையணி

Editorial   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாக்கந்துரே மதுஷ் இந்தியா செல்ல உதவியதாகக் கருதப்படும் சிவா என்ற நபரைத் தேடி கொச்சிக்கடைப் பிரதேசத்தில் பொலிஸ் விசேட படையணியினர் பரிசோதானைகளை முன்னெடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சிவா குறித்தப் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை மட்டக்குளி- மாதம்பிட்டி பிரதேசத்தில் வைத்து அந்தரேவத்தே சாமர என்ற நபர் பொலிஸ் விசேடப் படையணியால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென்றும், இவர் மாக்கந்துரே மதுஷுடன் நெருக்கமானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரைக் கைதுசெய்யும் போது, இவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் 5 கிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேடப் படையணியினர் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .