2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மத்தளையில் விமானமொன்று தீப்பற்றி எரிந்தது

Editorial   / 2018 டிசெம்பர் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் விமான நிலையத் தீயணைப்பு படையினரால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த CVK 7042 சரக்கு விமானமே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

குறித்த விமானம் நேற்று மாலை தாய்லாந்திலிருந்து மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், அது இன்று காலை ஓமான் நோக்கி புறப்பட்ட தயாரான போதே விமானத்தில் தீப்பரவியுள்ளது.

இதன்போது குறித்த விமானத்தில் 7 அலுவலக பணியாளர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்றும், குறித்த தீப்பரவலுக்கான காரணம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மத்தள விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .