Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓகஸ்ட் 7ஆம் திகதி அன்று வர்த்தமானி அறிவித்தலில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கையொப்பமிட்டதை தொடர்ந்து 2015 இலக்கம் 5 பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான உதவிச் சட்டம் ஓகஸ்ட் 15லிருந்து அமுலுக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டம் குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்கவும் இது தொடர்பாகஓர் அதிகார சபையை அமைக்கவும் வகைசெய்துள்ளது.
பொலிஸ் மா அதிபர், பாதிக்கப்படவருக்கும் சாட்சிகளுக்கும் உதவி வழங்க ஒரு விசேட பிரிவை அமைக்கவும் இந்தச் சட்டம் வழி செய்துள்ளது.
புதிய சட்டப்படி அமைக்கப்படும் தேசிய அதிகார சபை குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பும் நட்டஈடும் வழங்கும். சாட்சிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கு எதிராக குற்றம் புரிவோருக்கு எதிராக இந்த அதிகார சபை சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த தேசிய அதிகார சபையில் 12 அங்கத்தவர்கள் இருப்பர். இதில் 5 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். 7 பேர் தொடர்புள்ளஅமைச்சுக்கள் திணைக்களங்களின் பிரதிநிதிகளாக இருப்பர். இவர்கள் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாக இருப்பர்.
குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடையும் சந்தர்ப்பத்தில் நட்டஈடு அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சாட்சிகளுக்கு ஆபத்து இருக்குமிடத்து அவர்களை புதிய இடத்தில் குடியமர்த்த வகைசெய்யும். மேலும் வீடியோ மூலம் சாட்சியமளிக்கவும் ஏற்பாடுசெய்யப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025