2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதுவெல்லாம் கிடைக்காது தெரியுமா?

Editorial   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதிகளின்  உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்திற்கு   எதிர்கட்சிப்பக்கத்திலிருந்து எதிராக சாமர சம்பத் தசநாயக்கவும் ஆதரவாக அர்ச்சுனா இராமநாதனும் மட்டுமே வாக்களித்தனர். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) அன்று  ஜனாதிபதிகளின்  உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதம் காலை 11 மணிமுதல்  மாலை 3.30 மணிவரை இடம்பெற்றது. இதனையடுத்து சட்டமூலத்தை நிறைவேற்ற சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வாக்கெடுப்பைக் கோரினார்.

1986ஆம்ஆண்டு 04ஆம்இலக்க ஜனாதிபதிகளின் உரித்துசட்டத்தை இரத்துச்செய்யும் பொருட்டு இச்சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டம் இந்தசட்டமூலத்தின் ஊடாக இரத்துச்செய்யப்படும்.


இரத்துச் செய்யப்படும்ச ட்டத்தின் 2ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் ஏதேனும் வீடு அல்லது செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு, இரத்துச்செய்யப்படும்.

 சட்டத்தின் 3ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு செலுத்தப்படும் செயலாளருக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வேறு சகலவசதிகள்  இரத்துச்செய்யப்படும்

சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு செலுத்தப்படும் மாதாந்தகொடுப்பனவு என்பன நிறுத்தப்படும்.


 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .