2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மனித உரிமை இணைப்பாளர் ஆலயத்தை பார்வையிட்டார்

Freelancer   / 2023 மார்ச் 31 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

நெடுங்கேணி, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர். பிரியதர்சன, வியாழக்கிழமை (30) சென்று
பார்வையிட்டுள்ளார்.

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்ட சிவன் சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள்
உடைத்து எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதற்கு அமையவே ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரினால் குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளளது வெடுக்குநாறி மலைக்கு செல்வதற்கு முன்னர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு தகவல் அறிந்து கொண்ட அவர்,  வெடுக்குநாரி மலைக்கு சென்று ஆலய சூழல் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில்  நேரடியாக ஆராய்ந்துள்ளார்.

வெடுக்குநாறி மலை தொடர்பில் மனித உரிமைய ஆணைக்குழுவின் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .