2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மனோவின் கோரிக்கைக்கு சர்வ கட்சி கூட்டத்தில் இணக்கம்

Editorial   / 2020 மார்ச் 24 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு அமுல்படுத்தப்படும்  வேளையில் தோட்டத்தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடவும் தோட்ட தொழிற்சாலைகள் இரவு நேரத்திலும் தொழிற்படவும் தொழிலாளர்களின் வருமானத்துக்கு பாதகம் ஏற்படாவண்ணம் தடையின்றி தொழில் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் கோரிக்கை சர்வ கட்சி கூட்டத்தில் ஏற்றுக்​கொள்ளப்பட்டுள்ளன.

வயல்களில் விவசாயம் செய்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தோட்ட தொழிலாளருக்கும் வழங்கப்பட வேண்டும், என்ற தனது கோரிக்கை கருத்துகள் சர்வ கட்சி கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவரது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,  இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர், மலையக பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை உடன் வழங்குவார் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .