Editorial / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நாடளாவிய ரீதியில் அணைத்து இன,மத,மொழி மக்களுக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்யுமாறு கோரி, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், கையெழுத்து வேட்டை நேற்று (27) காலை மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், அதன் ஒருங்கிணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில் நடைபெற்றது.
சர்வதேச ரீதியில் நடைமுறையில் உள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை தொடர்பான சட்டங்களை தேசிய ரீதியில் நடை முறைப்படுத்துவதுடன் அபிவிருத்தி, அனைத்து மக்களுக்கும் பொதுவாக நிகழ வேண்டும், முறையற்ற கருத்திட்டங்களால் மக்களின் வாழ்வதற்கான உரிமை இரத்துச் செய்யப்படுமாயின் அது தொடர்பாக அரசங்கம் சிந்திக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே, குறித்த கையெழுத்து வேட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் சேகரிக்கப்படும் கையெழுத்துகள் அனைத்தும் கோரிக்கையாக அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
16 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago