2025 ஜூலை 05, சனிக்கிழமை

மன்னார் மனிதப் புதைகுழி; 6 எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனைக்குத் தெரிவு

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னர் மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை பரிசோதனைக்கு அனுப்புவதற்காக, அந்த எலும்புக்கூடுகளிலிருந்து 6 மாதிரிகளைத் தெரிவு செய்யும் பணிகள், மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், நேற்றுப் புதன்கிழமை காலை இடம்பெற்றன.

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் அகழ்வுப் பணிகள், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில், நேற்றைய தினம் (19), 119ஆவது நாளாகவும் இடம்பெற்றன. இதன்போதே, ​மாதிரிகளின் தெரிவும் இடம்பெற்றது.

குறித்த மனிதப் புதைகுழயிலிருந்து, இதுவரையில் 280 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 274 எலும்புக்கூடுகள், மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் 06 மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றை 'காபன்' பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள், நேற்று முன்தினமும் நேற்றும் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆறில் 02 எலும்புக்கூடுகள் இதுவரை தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று, சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .