2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மரண பயம் வந்துவிட்டது: மஹிந்த

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது நாட்டில் வாழ்கின்ற பிள்ளைகளின் இதயத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மரண பயம், அவர்களின் இதயங்களில் மீண்டும் சூழ்கொண்டுள்ளது. இது தனக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சேயா சந்தவமி கொலை மற்றும் சிவலோகநாதன் வித்யா என்ற மாணவியின் படுகொலை  உள்ளிட்ட கடந்த சில நாட்களாக இடம்பெற்ற படுகொலை சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியூட்டிவிட்டன.

இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளின் பாதுகாப்பு அவர்களின் பெற்றோர்களிடம்  மட்டுமில்லை. அந்த பொறுப்பு நாட்டை ஆட்சி செய்கின்றவர்களின் கைகளிலும் இருக்கின்றது என்பதே எனது நம்பிக்கையாகும். அதற்கு முன்னுரிமையளிக்குமாறு ஆட்சியில் இருப்பவர்களிடம் நான் கோரிக்கைவிடுகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X