2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மரணித்தவரின் வீட்டில் மூவருக்கு கொரோனா

S. Shivany   / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

ரம்புக்கன- கொத்தனவத்த கிராம சேவைப் பிரிவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த 75 வயதுடைய நபரின் மகன், மகள் மற்றும் 15வயதுடைய சிறுவன் ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அருகில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் உந்துகொட சிகிச்சை  நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X