2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மருந்தகங்களுக்கு விசேட அறிவுறுத்தல்

Editorial   / 2020 மார்ச் 22 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட வைத்தியர் ஒருவரின் சரியான மருந்து குறிப்பு இல்லாமல் "Chioroquine" மற்றும் "Hydroxychioroquine" எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களை மீறும் ஒவ்வொரு நபரும் குற்றமிழைத்தவர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் பிரிவு 131 ன் கீழ் வழக்குத் தொடப்படும் என அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .