2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மருந்து உற்பத்திகள் அதிகரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்க, உலகிலுள்ள பல நாடுகள் உதவி வரும் நிலையில், இலங்கையின் மருந்து உற்பத்தி நிறுவனம் தனது உற்பத்திகளை அதிகரித்துள்ளதாக, குறித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுஜீவ ஜயசுந்தர தெரிவித்தார்.

இப்போதைக்கு, 78 வகையான அத்தியாவசி மருந்துப்பொருள்கள் தயாரிக்கப்படுவதாகவும் இந்நிலையில், கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் தேவைக்காக, இந்த உற்பத்தி அளவை அதிகரிக்கவுள்ளதாக கூறினார்.

வலி நிவாரணியாகவும் காய்ச்சலைக் குறைப்பதற்குப் பயன்படும் மாத்திரை, சீனி நோயைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், உடலில் அதிகளவு ஏற்படும் கொழுப்பைக் குறைப்பதற்கான மாத்திரைகள் ஆகியவற்றை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவை அனைத்துக்கும் சந்தையில் அதிகளவு கேள்வி காணப்படுவதாகவும் அத்துடன், கொவிட்-19 பிரச்சினைக்குப் பின்னர், இந்த மருந்துகளுக்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X