Editorial / 2026 ஏப்ரல் 08 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் - மரதன்கடவலை பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன், நீர் நிறைந்திருந்த மலசலகூடக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது : கொல்லன்குட்டிகம பகுதியைச் சேர்ந்த அகார் மொஹமட் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு அවාසனாவாரியாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் தனது 9 மற்றும் 13 வயதுடைய சகோதரர்களுடன் இணைந்து, அப்பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.
இதன்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீர் நிறைந்த மலசலகூடக் குழிக்குள் அச்சிறுவன் தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனைத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .