2024 ஜூன் 17, திங்கட்கிழமை

மலையக மார்க்க ரயில் சேவைகள் பல இரத்து

Freelancer   / 2024 மே 26 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக ரயில் மார்க்கத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால்,  ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கடுகன்னாவை பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பொடி மெனிக்கே ரயில் அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதல்கஸ்ஹின்ன பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் உடரட்ட மெனிக்கே ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக மழை மற்றும் காற்றுடனான வானிலையினால் ரயில் மார்க்கங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற்கொண்டு கொழும்பு - பதுளைக்கிடையிலான இரண்டு இரவு நேர தபால் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X