Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2020 மார்ச் 09 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக நிருபர்கள்
மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த பதீட்டில் ஒதுக்கப்படும் என, உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன், ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியும் தரமுயர்த்தப்பட்டு, அடுத்தாண்டு முதல் பட்டம் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மலையக பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை தெரிவுசெய்வதற்காக ஹட்டனுக்கு இன்று (9) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன,தனது பணிகளை முடித்துக்கொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இந்த கண்காணிப்பு விஜயத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உறுப்பினர் கணபதி கனகராஜ் உள்ளிட்ட பலரும் அமைச்சருடன் இணைந்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
2 hours ago