2025 ஜூலை 03, வியாழக்கிழமை

‘மலையக மக்கள் பூரண பிரஜைகளாக வாழவேண்டும்’

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டின் மலையகப் பிரதேசங்களில் வாழ்கின்ற தொழிலாளர் மக்கள், இலங்கையர் என்ற ரீதியில் பூரணப் பிரஜைகளாக வாழவேண்டுமென வலியுறுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதைப் பெயருக்காக மட்டும் மட்டுப்படுத்த முடியாதென்றும் ஒரு பெயர்ப் பலகையாக இருக்கவும் கூடாதென்றும் கூறியதோடு, உண்மையான பிரஜைகளாக வாழ வேண்டுமென்றால். ஏனைய மக்களைப் போன்று, அனைத்து உரிமைகளும் இவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ், மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம், பொகவந்தலாவ - பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனி வீடுகள் அடங்கிய “வீ.கே.வெள்ளையன் புரம்” புதிய கிராமத்தைக் கையளிக்கும் நிகழ்வும் பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும், நேற்று (24) இடம்பெற்றது. 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.   

அங்கு தொடர்ந்துரைத்த பிரதமர், “மலையக மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ள, சாராயம் வழங்கப்போவதில்லை, மாறாக, வீடுகளைக் கொடுப்பேன் என்றுத் தெரிவித்திருந்த நான், எமது அரசாங்கத்தின் கீழ், 25,000 வீடுகளை இம்மக்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறோம்” என்றார்.  

“பொருளாதாரம், அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு, தொழிற்பயிற்சி போன்றவற்றில், மலைநாட்டு இளைஞர்களை ஊக்குவிக்கவுள்ளோம். எதிர் காலத்தில், பொகவந்தலாவையில் மாணிக்கக்கல் தொழில் உற்பத்தியை செயன்முறைப்படுத்த உள்ளதோடு, உல்லாசப் பிரயாண நகரமாக வலுப்படுத்தி, நுவரெலியாவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட உல்லாச பிரயாணத்துறையை இப்பகுதிக்கும் கொண்டுவரவுள்ளோம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .