2024 ஜூன் 17, திங்கட்கிழமை

’மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு காணி உறுதிகள்’

Freelancer   / 2024 மே 27 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய செயற்பாடாக மாறியுள்ளது. எனவே, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று  முற்பகல் நடைபெற்ற வவுனியா மாவட்ட 'உறுமய' காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 600 முழுமையான காணி உறுதிப் பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டதோடு, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் 1,376 இலவசப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

 ஜனாதிபதி என்ற வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முக்கியமானது.

யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் கட்டடங்கள் அழிந்து போனதுடன் பலர் தமது காணிகளை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய செயற்பாடாக மாறியுள்ளது. எனவே, இந்தப் பிரதேசத்தில் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X