2024 ஜூன் 17, திங்கட்கிழமை

மழையால் டெங்கு பரவும் அபாயம்

Freelancer   / 2024 மே 25 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 227 டெங்கு நேயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரத்து 234 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இந்த மாதத்தின் இதுரையான காலப்பகுதியில் 1,954 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் 5 ஆயிரத்து 183 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X