2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மஹிந்தானந்தவின் வங்கிகளின் கணக்குகளை அறிக்கையிட உத்தரவு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிக்கணக்குகள் தொடர்பிலான அறிக்கையை இரகசியப் பொலிஸாரிடம் கையளிக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவே, வங்கி முகாமையாளர்களுக்கு இந்த உத்தரவை நேற்று புதன்கிழமை பிறப்பித்தார்.

முன்னாள் அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே, குறுகிய காலத்துக்குள் சட்டவிரோதமான முறையிலும் முறைகேடான முறையிலும் பொதுமக்களின் நிதி மற்றும் சொத்துக்களைத் திரட்டினார் என்று குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இந்த சம்பவங்கள் தொடர்பில், மோசடிக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .