2025 மே 17, சனிக்கிழமை

மஹிந்தா, வெல்கமவுக்கு பதவி வேண்டும்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார் வெல்கம ஆகிய இருவருக்கும் எதிர்க்கட்சியில் முக்கிய பதவிகளை வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 56 பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவை எதிர்க்கட்சி தலைவராக்குமாறும் மஹிந்தானந்த அளுத்கமகேயை எதிர்க்கட்சிகளின் சபைத்தலைவராக நியமிக்குமாறும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .