2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மஹிந்தவுடனேயே கைகோர்ப்போம்: சு.க உறுப்பினர்கள் உறுதி

Thipaan   / 2016 ஜனவரி 20 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 19 உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் கைக்கோர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அநுராதபுரம் மாநகர சபையின் கேட்போர் கூடத்தில், நேற்று புதன்கிழமை கூடியபோதே, அவர்கள் மேற்கண்டவாறு தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிட்டால் மட்டுமே, அடுத்த தேர்தலில் மக்கள் தம்பக்கம் அணியணியாய் திரண்டுவருவர் என்று, அநுராதபுர நகர பிதா எச்.பீ. சோமதாஸ தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ இன்றி களத்தில் குதித்தால், நாம் தோல்வியடைவோம். அவரின்றி அடுத்தத் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X