2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியின் காணி தோண்டப்பட்டது

Kanagaraj   / 2016 பெப்ரவரி 26 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், பிரதம பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில்கேவின், காணியில் பல இடங்கள் பெக்கோ இயந்திரத்தை கொண்டு தோண்டப்பட்டது.  

மெதமுலனயில் உள்ள காணியே இவ்வாறு தோண்டப்பட்டது.  

எனினும், தோண்டப்பட்ட இடங்களிலிருந்து, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் பொருட்களோ அல்லது பெறுமதிவாய்ந்த பொருட்களோ மீட்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 20 பேர், இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பணம், தங்க நாணயங்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே, அந்த காணி தோண்டப்பட்டதாக அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X