Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
S.Renuka / 2025 மே 19 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர் வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், திங்கட்கிழமை (19) தேசிய போர் வீரர்களின் நினைவு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கேட்டுக்கொள்கிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுவதாகவும், அது தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் பெயரில் ஜனாதிபதி செய்யும் ஒரு பெரிய தவறு என்றும் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு கட்சியாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஒரு கட்சியாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை அரச தலைவராகவும், பிரதமராக ஹரிணி அமரசூரியவை தேசிய போர் வீரர்களின் நினைவு விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.
அரச தலைவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்தவுடன், போரை முடிவுக்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் தனி விழாவை நடத்த அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது, அந்தக் கோரிக்கை அமைச்சினால் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், SLPP, ஒரு தேசிய கடமையாக, மே 20 அன்று மாலை 5.00 மணிக்கு போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் ஒரு போர்வீரர் நினைவேந்தலை நடத்த முடிவு செய்துள்ளது. என்றார்.
படைத் தளபதி என்ற முறையில் ஜனாதிபதியின் தலைமையில் இந்த விழா நடைபெறும் என்று அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் செனரத் கோஹோன (ஓய்வு) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்த 16ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் தேசிய போர்வீரர் தினம், வெற்றி நாள் என்றும் அழைக்கப்படுகிறது, இது நாளை மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள தேசிய போர்வீரர் நினைவுச்சின்னத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடற்படை அட்மிரல் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள்; மற்றும் போரின் இறுதிக் கட்டத்தில் முப்படைகளையும் வழிநடத்திய விமானப்படை மார்ஷல் ரோஷன் குணதிலக ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
2 hours ago
2 hours ago