2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மஹிந்த மீதான கொலை முயற்சி: பின்னணியில் பொலிஸார்

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொல்வதற்கான சதிக்குப் பின்னால், பொலிஸார் உள்ளனர் என, ஒன்றிணைந்த எதிரணி கருதுகிறது என, அதன் உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க எம்.பி தெரிவித்துள்ளார். 

நேற்று (27) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதியையும் அவரது குடும்பத்தினரையும் கொல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற தகவல் தொடர்பாக, பொலிஸார் கணக்கிலெடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். 

“பரவலாகப் பரவியுள்ள, கொலை முயற்சியை மூடி மறைப்பதற்கு, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர எவ்வாறு முயன்றார் என்பதை, புதன்கிழமை பார்த்தோம். அவ்வாறான முயற்சி தொடர்பாக, இதுவரை எத்தகவலுமே வெளிவரவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார். 

“இது தொடர்பாக, பல செய்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கும் பின்னணியில், இது தொடர்பாகப் பொலிஸார், எதற்காகக் கணக்கிலெடுக்காமல் உள்ளனர் என்பதை, எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை” என, அவர் குறிப்பிட்டார். 

தொடர்ந்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பை, அரசாங்கம் அதிகரிக்க வேண்டுமெனவும், இவ்விடயத்தை முக்கியமானதாகக் கருதி, நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X