2025 ஜூலை 16, புதன்கிழமை

’மஹிந்தவின் அனுமதியில்லாது மைத்திரியுடன் கதைக்க மாட்டேன்’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் விசேட கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்கு, ஜனாதிபதி தனக்கும் அழைப்பு விடுத்திருக்கிறாரெனத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, எனினும் தான் அந்த விசேட கலந்துரையாடலைப் புறக்கணிப்பதாகவும் தெரிவித்தார்.

புஞ்சி பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில், நேற்று(02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது, அவர் மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், "ஜனாதிபதி செயலகத்தில் இன்று (நேற்று) மாலை 7 மணிக்கு, நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளது. இதில் என்னைக் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எரிக் பிரசன்ன வீரவர்தன, கடிதம் ஊடாக எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

"எனினும், ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட தலைவர்களின் அனுமதியில்லாது, நான் ஒருபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், எந்தவிதமான உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும் ஈடுபடப்போவதில்லை. ஆகவே, இந்தக் கலந்துரையாடலை நான் புறக்கணிக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .