2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவுக்கு கொழும்பில் அடிக்கவிருக்கும் அதிர்ஷ்டம்

Editorial   / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அவரது அரசியல் நண்பர்கள் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல சொகுசு வீடுகளை வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளை வழங்க முன்வந்த அரசியல் நண்பர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய கொழும்புப் பகுதியில் வசிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

அந்த வீடுகளில் எந்த வீட்டைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்குவதற்கு போதுமான இடம் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ள வீட்டைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .